என்ஜின் பழுதாகி நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் அவதி

70பார்த்தது
என்ஜின் பழுதாகி நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் அவதி
தஞ்சாவூரில் இன்று(செப்.3) நடுவழியில் ரயில் பழுதாகி, ஏறத்தாழ ஒருமணி நேரம் நின்றதால், அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயில் வழக்கம் போல காலை 8. 10 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டது. தஞ்சாவூருக்கு 9. 40 மணிக்கு வந்த இந்த ரயில், நிலையத்துக்கு அருகே உள்ள சாந்தபிள்ளை கேட் பகுதியில் நடு வழியில் என்ஜின் பழுதாகி நின்றது.

பழுதை சரிசெய்ய ரயில்வே ஊழியர்கள் முயன்றும் சீராகாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகினர். தஞ்சாவூர் செல்லும் பயணிகள் தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர். பூதலூர், திருச்சிக்கு செல்வோர் இறங்கி பேருந்திலும், சிலர் அருகில் நாகை வழித்தடத்தில் வந்த நாகூர் - திருச்சி ரயிலிலும் ஏறிச் சென்றனர். பின்னர், மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதான ரயிலில் பொருத்தப்பட்டு, ஏறத்தாழ ஒரு மணிநேரம் தாமதமாக பிறகு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் பழுது காரணமாக சிக்னல் விழுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் திருச்சி காரைக்கால் ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு ஏறத்தாழ 30 நிமிஷம் தாமதமாக வந்து சென்றது.

தொடர்புடைய செய்தி