பேராவூரணி அருகே மத நல்லிணக்க கந்தூரி விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சம்பைப்பட்டினத்தில் ஜமாலிய்யா மெளலானா நாயகம் 77-ஆவது ஆண்டு புனித கந்தூரி ஜியாரத், மத நல்லிணக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் நபிகள் நாயகத்தின் (ஸல்) 36- ஆவது தலைமுறை பேரர் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மெளலானா நாயகம் தலைமை வகித்து, பெண்களுக்கான புதிய தனிக்கட்டடத்தை திறந்து வைத்தார். அகுலுல்பைத் குடும்பத்தினர் மற்றும் டிஏபி, கலீபாக்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் இந்து மற்றும் பல்வேறு சமய பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கந்தூரி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.