கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கில் பட்டுக்கோட்டை, பேராவூரணி எம். எல். ஏக்கள் கலந்து கொண்ட னர்.
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள், நகரத்தந்தை ஆர். சீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் பட்டுக்கோட்டையில் நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை எம். எல். ஏவுமான அண்ணாதுரை தலைமை வகித்தார். பேராவூரணி எம். எல். ஏ. அசோக்குமார் முன்னிலை வகித்தார். திராவிட இயக்க தனிப்பெரும் தலைவர் கலைஞர் என்ற தலைப்பில் திமுக மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, மக்கள் தொண்டர் நகரத் தந்தை சீனிவாசன் எனும் தலைப்பில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் உரையாற்றினர். முடிவில் பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர்
செந்தில்குமார் நன்றி கூறினார். கருத்தரங்கில் திமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.