ஊராட்சி தலைவர் ஆக்கிரமித்து சாலை அமைப்பு: பெண் புகார்

70பார்த்தது
ஊராட்சி தலைவர் ஆக்கிரமித்து சாலை அமைப்பு: பெண் புகார்
தனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை ஊராட்சி தலைவர் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மூதாட்டி ஒருவர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முத்தாகுறிச்சி கீழக்காடு
பகுதியைச் சேர்ந்த கருப்பையன் என்பவரது மனைவி சந்திரா (60). இவர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 14. 9. 21 அன்று அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து எனக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங் கினர். இதைத் தொடர்ந்து
எங்கள் ஊராட்சி தலைவர் அந்த மனையில் ஆக்கிரமிப்பு செய்து சாலை போட்டுள்ளார். இது குறித்து மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டாட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை மேற் கொண்டு மாற்று பட்டா அல்லது ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி