ஆறுபடை வீடுகளின் நான்காம் படை வீடாக திகழக்கூடிய சுவாமிமலை சாமிநாத சாமி திருக்கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் வள்ளி திருக்கல்யாணத்திற்கு தந்தை வீட்டு சீதனமாக குறவர் இன மக்கள் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக ஆடிப்பாடி, பல வகை பழங்கள், மலர் மாலைகள், பட்டு வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள், தேன் தினை மாவு உள்ளிட்ட பலவிதமான சீர்வரிசை பொருட்களை சமர்ப்பித்தனர். பின்னர் சிறப்பாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.