அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் 'ஓஜி சம்பவம்' பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாடல் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் இப்பாடல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.