எம்புரான் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிருத்விராஜ், நடிகர் மோகன்லால் கலந்துகொண்டார்கள். அதில் பிருத்விராஜ் இந்தப் படத்தில் நடிக்க மோகன்லால் ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை. இது மிகப்பெரிய விஷயம். ஒரு சிலர் மட்டுமே இப்படி இருக்கிறார்கள். அக்ஷய் குமார் அப்படி இருந்திருக்கிறார். நாங்கள் இதுவரை இல்லாத ஒன்றை முயற்சித்து இருக்கிறோம். அதற்கு இப்படி எல்லாம் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் அது சாத்தியமாகும் என கூறியள்ளார்.