தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை துணை முதல்வருடன் பின் தொடர்ந்து சென்ற இரு கார்கள் முந்த முயன்றபோது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில், எல்ஏ எம். பி. க்கு லேசான காயம் ஏற்பட்டது. தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவையாறு அருகேயுள்ள கண்டியூர்
புறவழிச்சாலையில் நடைபெற்ற கொடியேற்று
நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் கோனேரிராஜபுரத்தில் சிலைகள் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வரின் கார் புறப்பட்டது. இவரது காரை சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரின் கார்களும் பின் தொடர்ந்து சென்றன. இதனிடையே, திருவையாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் சென்ற கார், துணை முதல்வருக்கு வழிகாட்டுவதற்காக முந்த முயன்றபோது, முன்னால் சென்ற மற்றொரு கட்சி நிர்வாகியின் கார் மீது மோதியது. இதனால், துரை. சந்திரசேகரன் காரில் சென்ற தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என். அசோக் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.