தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி பகுதியில் கடைத்தெருவில் மளிகை கடை வைத்திருந்த அம்ஜத் கான் என்ற வியாபாரி கடையில் குட்காவை விற்பனை செய்த போது உரக்கச் சொல் என்ற முதலமைச்சரின் தளத்தின் மூலம் தகவல் வாட்சாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கிடைத்தது.
அதன் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான அதிரடிப்படை குட்கா விற்பனை செய்த அம்ஜத்கான் கடையில் சோதனை செய்தனர். அவரை கைது செய்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உரக்கச் சொல் தளத்தின் மூலமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் உடனுக்குடன் காவல்துறைக்கு கிடைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
ஒரத்தநாடு ஏஎஸ்பி சஹ்னாஸ் உத்தரவின் பேரில் உரக்கச் சொல் தளம் மூலம் புகார் பெறப்பட்டு ஒரத்தநாடு பகுதியில் அதிக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.