கும்பகோணம் - Kumbakonam

தஞ்சாவூா்: 2 -ஆம் நாளாக மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டது. மேலும், வயலில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால், தேநீர்க்கடைகள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் சாலையோர உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.  பகலில் வாகனஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. குறிப்பாக, பாலக்கரை, தாராசுரம் காய்கனி சந்தைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. பயிர்கள் சேதம்: சோழன் மாளிகை, பட்டீசுவரம், பம்பப்படையூர், முழையூர், சாக்கோட்டை, தஞ்சாவூர் - கும்பகோணம் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயலில் தண்ணீர் தேங்கிதேங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా