காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சற்றுமுன் முதலமைச்சர் நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.