கும்பகோணம் அருகே தேனாம்படுகை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். முருகையன் (82). இவா் கோழி வளா்த்து வருகிறாா். இவரது வீட்டில் கோழி அடைக்கும் இடத்துக்கு அப்பகுதியைச் சோ்ந்த மற்றொருவரின் கோழிகள் சனிக்கிழமை மாலை வந்தன.
இக்கோழிகளை விடுவித்து தருமாறு முருகையன் வீட்டுக்கு வந்த அவற்றின் உரிமையாளா் கூறினாா். ஆனால், எந்தக் கோழி என்பது அடையாளம் தெரியவில்லை என முருகையன் கூறினாா். இதைத் தொடா்ந்து இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
அப்போது, தாக்கப்பட்ட முருகையன் மயங்கி விழுந்ததால், அவா் பட்டீஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட முருகையன் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.