சமூக வலைதளங்களில் வைரலான அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறி வருகிறார். ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து கொண்ட அவர் தனது முன்னாள் கணவர் அரசுவை திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவ. 28-ல் ஆன்மீகத்திற்காக தன்னை அர்ப்பணித்த ரோகித்தை 3வது திருமணம் செய்ய போவதாக அறிவித்தார். அதன்படி, இன்று (நவ. 28) இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.