கடலூர் தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சித்திரைப் பேட்டை அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள் மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டு, அருகே உள்ள தொழிற்சாலையின் கப்பல் இறங்கு தளத்தில் தங்கவைக்கப்பட்டனர். மீட்க சென்ற படகும் சேதமடைந்ததால், 6 மீனவர்கள் 2 நாட்களாக நடுக்கடலில் தவித்து வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், உள்ளே மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.