தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், அவர்களின் வழிகாட்டுதலில், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கும்பகோணம் டிராவல் கிளப் சார்பில், இன்று கும்பகோணம் மரபு நடைபயணம் கும்பகோணம் மகாமக குளம் முதல் காவிரி படித்துறை வரை நடைபெற்றது.
இந்த மரபு நடைபயணம் கும்பகோணம் மகாமக குளத்தில் தொடங்கி, துலாபாரம் மண்டபம், காசி விஸ்வநாதர் கோவில், வீரசைவ மடம், மணிக்கூண்டு, நெட்டி வேலைப்பாடு கூடம், நாகேஸ்வரன் கோவில், டவுன்ஹால், காந்தி பார்க், கோபாலராவ் நூலகம், ஜனரஞ்சக சபா, மாநகராட்சி தொடக்கப்பள்ளி (எம்ஜிஆர் படித்த பள்ளி), ஸ்ரீனிவாச ராமானுஜர் இல்லம், சாரங்கபாணி கோவில், பொற்றாமரை குளம் வழியாக, காவிரி படித்துறையில் நிறைவு பெற்றது.
கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனத் தலைவர் கோபிநாத் இந்நடைபயணத்தை வழிநடத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு. ஹம்சன், கும்பகோணம் டிராவல் கிளப் தலைவர் திரு. ஜாகிர் உசேன், திருமதி. சரண்யா, மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.