சிவகங்கை: உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

61பார்த்தது
கோடை வெயில் கடுமையாக இருக்கின்ற நிலையில், பொதுமக்கள் பழச்சாறுகளின் மீது அதிகமாக விருப்பம் காட்டுகின்றனர். ஆனால், சில கடைகள் தரமற்ற பழங்களை பயன்படுத்தி பழச்சாறு தயாரித்து விற்பனை செய்வதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சிவகங்கை உணவுத்துறை அலுவலர் சரவணகுமார் சிவன் கோவில், அரண்மனை வாசல், மஜித் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பல ஜூஸ் கடைகள் மற்றும் பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். 

இந்த ஆய்வில், அழுகிய நிலையில் இருந்த 200 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சில கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி