சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் முழுவதும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல கொடுத்து ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார் என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் குறித்த சர்ச்சை தமிழகத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது சம்பந்தமான அரசியல் கட்சிகளின் விவாதங்களும் தற்சமயம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை நகர் முழுவதும் 1000 ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து 1000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யார் என்கிற வாசகங்களுடன் பின்னாள் டாஸ்மாக் மதுபானக்கடையின் புகைப்படத்துடன் அமைந்த போஸ்டரானது ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் அதிமுக கொடி வண்ணத்தில் சிவகங்கை மாவட்ட கழகம் என்கிற பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. எனவே அதிமுகவினர் இந்த போஸ்டரை ஒட்டியது ஊர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில் இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.