சிவகங்கை: மருத்துவக்கல்லூரி முதல்வர் விளக்கம்

71பார்த்தது
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது துவங்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்சமயம் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் இறுதியாண்டு பயிற்சி மருத்துவர்களாக 100 மாணவ, மாணவியர் பயின்று வரும் நிலையில் பயிற்சி மாணவி ஒருவர் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பின்புறம் அமைந்துள்ள விடுதி நோக்கி செல்லும்போது பின் தொடர்ந்த மர்ம நபர் அவர் மீது துனியை போர்த்தி தாக்குதல் நடத்தியுள்ளார். 

அந்த மாணவி கூச்சலிடவே சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஏராளமான மாணவர்கள் ஓடிவரவே அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் மாவட்ட எஸ்.பி ஆஷித் ராவத் தலைமையிலான குழுவினர் சம்பவ இடம் வந்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி மீது தாக்குதல் மட்டுமே நடைபெற்றதாகவும் அது குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மருத்துவக்கல்லூரி முதல்வர் சத்தியபாமா தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி