சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2023-24 நிதியாண்டில் 8. 30 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக சமூக தனிக்கை குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உண்மையில் பணிபுரியாத நபர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கிராம சபை கூட்டத்திலும் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு, கணக்கில் உள்ள பலர் வேலை செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.