சிவகங்கை அருகே வீர வலசை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் முத்துராமலிங்கம் சோதனை மேற்கொண்டதில், முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (27) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்