அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொதுச்செயலர் கே. ஆர். விஸ்வநாதன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப் படுத்திட வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஒட்டு மொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்கிட வேண்டும். 1. 4. 2003 -க்கு முன்னர் பணியில் சேர்ந்து, பின்னர் பணி நிரந்தரம் பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 10, 000 வழங்க வேண்டும்.
தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கென தனித் துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதிய விகிதம் நிர்ணயிக்க வேண்டும். மக்கள் விரும்பும் பொருட்களை மட்டும் கேட்டறிந்து வழங்கி கடத்தலை தடுத்து நிறுத்தி மக்கள் வரிப் பணத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி