சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சுவாமி நாராயணபுரம் பகுதியில் அனுமதியின்றி ரேக்ளா ரேஸ் நடத்தியதாக கட்டாம்பூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் வாசுகி திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி சார்பு ஆய்வாளர் சத்தியமூர்த்தி தேவாரம்பூர் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (55), கல்வெட்டு மேடு பகுதியைச் சேர்ந்த குமார் (42), கட்டாம்பூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (58) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு (41), செல்வேந்திரன் (35) ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.