ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை

64பார்த்தது
உலகம் முழுவதும் இன்றைய தினம் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மதுரை சாலையில் உள்ள ஈகா மைதானத்திலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, நோன்பு முடிவடைந்ததை அனுசரித்து இறை வழிபாடு செய்தனர். இஸ்லாமிய நம்பிக்கையின்படி, முகம்மது நபிக்கு முதன் முதலில் குரான் வெளிப்படுத்தப்பட்ட மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இம்மாதம் முழுவதும், தினமும் பின்னிரவில் உணவருந்தி, சூரியன் மறையும்வரை நோன்பு மேற்கொள்ளப்பட்டது.
30-வது நாளில் பிறை தெரிந்தவுடன், ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் வழக்கம் உள்ளது. அதன்படி, இன்று அனைத்து வயது மக்களும் புத்தாடைகள் அணிந்து, இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்தபின், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி