பாஜக, கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.723.6 கோடியும், காங்கிரஸுக்கு ரூ.156.4 கோடியும் வழங்கி உள்ளது. காங்கிரஸின் நன்கொடையில் 50 சதவீதமும் இந்த அறக்கட்டளையிடம் இருந்து கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.