மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து பக்தர்கள் அறியும் வகையில் மாத காலண்டர் ஆண்டுதோறும் விற்கப்படுகிறது. ரூ.100-க்கு விற்கப்படும் என சில வாரங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகம் அறிவித்த நிலையில் காலண்டர் விற்பனையே நடக்கவில்லை. கேட்டால் விற்று தீர்ந்து விட்டதாகவும், இனி அடுத்த ஆண்டுதான் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். விஐபிகளுக்கு வழங்குவதற்காக காலண்டர்களை பதுக்கி வைத்துள்ளதாக பக்தர்கள் புகார் கூறியுள்ளனர்.