இந்தியாவில் மொத்த வனம் மற்றும் மரங்களின் அடர்த்தி பரப்பு 8,27,357 சதுர கி.மீ ஆக உள்ளது. இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதமாகும். வனப்பகுதி சுமார் 7,15,343 சதுர கி.மீ (21.76%) பரப்பளவும், மரங்களின் அடர்த்தி பகுதி 1,12,014 சதுர கி.மீ (3.41%) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டை ஒப்பிடும்போது நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ அதிகரித்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.