ஆண்களின் விந்தணுக்களை அதிகரிப்பதில் வைட்டமின் பி12 பெரிதும் உதவுகிறது. இது உடல், மனது மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை பராமரிக்க பெரும் பங்கு வகிக்கிறது. இறைச்சி, முட்டை, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் பி12 காணப்படுகிறது. 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 50% சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. பி12 குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி அதன் பின்னரே மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.