வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ரூ.5,000 நோட்டுக்கள் மத்திய அரசால் வெளியிடப்படுவதாக இணையத்தில் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை RBI முற்றிலும் மறுத்துள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளே போதுமானதாக இருப்பதாகவும், புதிய ரூ.5,000 நோட்டை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டில் தற்போதைய உயர்ந்த பட்ச பணமாக ரூ.500 உள்ளது.