டிரைவர் இல்லாமல் ஓடும் மெட்ரோ ரயில்கள் விரைவில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான சோதனை ஓட்டத்தை CMRL நிறுவனம் தற்போது துவங்கியுள்ளது. மூன்று பெட்டிகள் கொண்ட ரயிலை BEML நிறுவனம் தயாரித்துள்ளது. இது பூந்தமல்லி டெப்போவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் பூந்தமல்லி போரூர் வழித்தடத்தில் ஓட வைத்து பிரேக்கிங் சிஸ்டம் சோதிக்கப்பட உள்ளது.