ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஒருவர் ரூ.45 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளுக்கு வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். சிபில் ஸ்கோர் 800 என வைத்துக்கொண்டால், இதற்கான வட்டி விகிதம் 9.15% ஆகும். எஸ்பிஐ-ன் வீட்டுக் கடன் கால்குலேட்டரின் படி இந்த வட்டி விகிதத்தில் ரூ.45 லட்சம் வீட்டுக் கடனுக்கு மாதம் ரூ.40,923 EMI செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் வட்டியாக ரூ.53,21,472 சேர்த்து வட்டி மற்றும் அசலாக ரூ.98,21,472 ரூபாய் மொத்தமாக திருப்பி செலுத்த வேண்டும்.