20ஆம் ஆண்டு சுனாமி நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுனாமியில் உயிர்நீத்தவர்களின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். துக்கம் அனுசரித்து, கடலூர், நாகை, கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீனவ கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் கல்லறையில் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.