அண்ணா பல்கலை., மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக ஹாஸ்டல் விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு 8.30 மணி வரைக்கும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6:30 மணிக்கு மாணவர்கள் ஹாஸ்டலில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதிக்கு தாமதமாக வரநேரிட்டல் முன்கூட்டியே ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.