சுனாமி நாள்: நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய மக்கள்

79பார்த்தது
சுனாமி நாள்: நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய மக்கள்
20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ மணக்குடி கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களும் இன்று (டிச., 26) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 2004 டிச., 26ஆம் தேதி இந்தோனேசியாவின் மத்ரா தீவுக்கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி