டெல்லி: இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய ஏழு லட்சம் ஃபாலோவர்களைக் கொண்ட பிரபல ரேடியோ ஜாக்கி சிம்ரன் சிங் 25 தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிம்ரன் சிங் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, சிம்ரனின் குடும்பத்தினர் தற்கொலையில் மர்ம இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.