2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

65பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மேம்பட்ட CNC மெஷினிங் டெக்னிஷியன் (Advanced CNC Machining Technician), அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (Basic Designer and Virtual Verifier (Mechanical)), மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம் (Mechanic Electric Vehicle) - இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் (Industrial Robotics and Digital Manufacturing Technician) - ஓராண்டு தொழிற்பிரிவுகளும் என நான்கு தொழிற் பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இப்புதிய தொழிற்பிரிவுகளுக்கான முற்றிலும் குளிரூட்டப்பட்ட (A/C) வகுப்பறைகள், எந்திர மனிதனால் (Robotics) வெல்டிங் செய்யப்படும் நவீன தொழில்நுட்ப பயிற்சி, ஆட்டோமேட்டிக் தொழிற்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களில் பயிற்சி, அனைவருக்கும் கம்ப்யூட்டர் மூலம் நவீன பயிற்சி, பயிற்சியினை முடித்ததும் மாதந்தோறும் ரூபாய். 25, 000/-சம்பளத்தில் உடனடி வேலை வாய்ப்பு சிறப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளதாகஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி