சேலம் எல்லை பிடாரி அம்மன் கோயில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி

73பார்த்தது
சேலம் அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து எல்லப்பிடாரியம்மன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து எல்லைப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல், அலகு குத்துதல் தொடர்ந்து சக்தி பூ கரகத்துடன் அம்மன் ஊர்வலம், திருக்கல்யாணம் மற்றும் அக்னி குண்டத்தில் இறங்குதல் நிகழ்ச்சியும், பால்குட ஊர்வலம் மற்றும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி