சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வருகிற 20-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவில் பிரதான நுழைவு வாயில் கதவு ரூ. 50 லட்சத்தில் தயார் செய்யப்பட்டது. அதில் பெருமாள், நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் உள்ளிட்ட 10 அவதாரங்களுடன் காட்சி அளிக்கும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கதவு பொருத்தும் பணி நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜை செய்யப்பட்டு கதவு பிரதான வாசலில் பொருத்தப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி, செயல் அலுவலர் அனிதா மற்றும் அறங்காவலர்கள், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் சரவணன் ஆகியோர் செய்து இருந்தனர்.