மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கான அறிவிப்புகள் இல்லாததைக் கண்டித்து, திமுக-வின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (ஜூலை. 27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக-வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கலைஞர் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.