TVS நிறுவனத்தின் எலக்ட்ரிக் பவர்டிரெய்னுடன் கூடிய முதல் கமெர்சியல் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ 3.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் LFP பேட்டரியுடன் 179 கிமீ ரேஞ்ச் தருகிறது. Live Tracking, Turn-By-Turn Navigation, Calls and SMS Integration போன்ற Smart Connect அம்சங்களுடன் அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும். 6 வருடம் Warranty, 3 வருடம் Road Side Assistance மற்றும் Maintanence சலுகைகளும் கிடைக்கின்றன.