ஜன.25-ம் தேதி சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

57பார்த்தது
ஜன.25-ம் தேதி சென்னை மெட்ரோவில் இலவச பயணம்
ஜன.25-ம் தேதி சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஜன.25ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை காண வரும் ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி