சேலம்: தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

72பார்த்தது
சேலம்: தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -
தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் குப்பைகளை கையாளும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், தூய்மை பணியாளர்களுக்கு நோய் தடுப்பு உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3 ஆயிரத்து 585 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி