ஆட்டோக்கள் எளிய மக்கள் பயன்படுத்தும் ஒரு வாகனம். 4 சக்கரங்களை விட 3 சக்கர வாகனத்தை வடிவமைத்தால் செலவு குறையும். குறுகலான பகுதிகளிலும் வளைந்து செல்ல முடியும். சிறிய இடத்திலும் பார்க்கிங் செய்ய முடியும். கூட்டம் நெரிசலான பகுதிகளிலும், போக்குவரத்து நிறைந்த பகுதிகளிலும் ஆட்டோக்கள் எளிதில் சென்றுவிடும். மற்ற வாகனங்களை ஒப்பிடும் போது குறைந்த எரிபொருள் போதுமானது. சாமானியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இது குறைந்த செலவும், அதிக லாபமும் கொண்டது.