கடம்பூர்: பாறை உருண்டு சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கடம்பூர் செல்லும் வழியில் பாறை உருண்டு சாலையில் விழுந்ததால் போக்கு வரத்துபாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்தநிலையில் இன்று மதியம் கடம்பூர் செல்லும் வழியில் போன் பாறை என்ற இடத்தில் சாலையோரம் இருந்த பாறை உடைந்து சாலையின் நடுவில் விழுந்தது. இதனால் டூவீலர்கள் மட்டுமே சென்றது. பஸ், டெம்போ, லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இரண்டு புறங்களிலும் அணிவகுத்து நின்றது. தகவலறிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். பின்பு ஜே. சி. பி. , மூலம் சாலையின் நடுவில் விழுந்து கிடந்த பாறைகளை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து சீராகி வாகனங்கள் சென்றது. சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.