ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் 20 ஈரநிலங்களில் வாழும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது. மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் உள்ள ஈரநிலங்களில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழாண்டில், தொடங்கிய இந்தக் கணக்கெடுக்கும் பணியில், வனத்துறையினர், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கணக்கெடுப்பின் போது, வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ, கரண்டிவாயன், சங்குவளை, நாரை உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டன. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: பறவைகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு புலம்பெயர்ந்து செல்கின்றன. பறவைகள் பெரும்பாலும் உணவுக்காகவும், இருப்பிடத்துக்காகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தனியாகவோ அல்லது குழுக்களாகவோ இடம்பெயருகின்றன. இங்கு வரும் பறவைகள் கணக்கெடுப்பு வனஉயிரினக் கோட்டத்தின் மூலம் நடத்தப்படுகிறது என்றனர்.