இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே பா என்று இசையமைப்பாளர் இளையராஜா பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, "மக்கள் என்னை இசைக்கடவுள் என்கிறார்கள். நான் சாதாரண மனிதனைபோல்தான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். என்னை இசைக்கடவுள், தெய்வம் என்று சொல்லும்போது எனக்கு என்ன தோன்றும் என்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே பா என்றுதான் தோன்றும்” என்று கூறியுள்ளார்.