கேரளாவில் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார். ஸ்ரீநந்தா (18) கிட்டத்தட்ட தண்ணீரை மட்டும் குடிக்கும் விபரீதமான டயட்டை பின்பற்றி வந்த நிலையில் அவரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீநந்தா Anorexia Nervosa என்ற கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அதாவது, எடை அதிகரித்துவிடுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்.