இந்தியாவில் 2027 ஆம் ஆண்டுக்குள் 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாளங்களை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், மத்திய வேளாண் அமைச்சகம் 2025-26 நிதியாண்டில் விவசாயிகள் பதிவேட்டை உருவாக்குவதற்கான அதன் இரண்டு முயற்சிகளுக்கு மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து சிறப்பு மத்திய உதவியை (எஸ்சிஏ) நீட்டிக்க முயன்றுள்ளது. அடுத்த நிதியாண்டில் (2025-26) டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பை ஆதரிப்பதற்காக வேளாண் அமைச்சகம் ரூ.2,000 கோடி ஒதுக்க கோரியுள்ளதாக கூறப்படுகிறது.