’புன்னகை மன்னன்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. ’வேலைக்காரன்’, ‘பத்ரி’ போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர் கராத்தே மாஸ்டராகவும் உள்ளார். இந்நிலையில் தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "நான் ரத்த புற்றுநோயை எதிர்கொண்டு மீண்டு வருவேன், மன உறுதியுடன் இருக்கிறேன்” என்றார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.