தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வெறும் 8 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது நவ்ரு என்னும் குட்டி தீவு. இந்த நாடு அடிக்கடி கடல் மட்டம் உயர்வு, புயல் மற்றும் கடலோர அரிப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து போராட நிதி திரட்டுவதை நோக்கமாக கொண்டுள்ள நவ்ரு அரசு, குறைந்தபட்சம் 1,05,000 டாலர்கள் அதாவது ரூ.91.38 லட்சம் கொடுத்து யார் வேண்டுமானாலும் இந்த நாட்டின் குடியுரிமையை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.