சிவகங்கை: கட்டனம் வசூல் செய்யப்படுகிறதா? ஆர்டிஓ திடீர் ஆய்வு
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து தொழில் நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரும்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அதனை பயன்படுத்தி ஒரு சில ஆம்னி பேருந்துகள் கட்டனகொள்ளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிபோல கட்டன கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சிவகங்கை அடுத்த பெருமாள்பட்டி பகுதியில் சிவகங்கை ஆர். டி. ஒ மூக்கன் ஆய்வாளர் மாணிக்கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டனம் வசூல் செய்யப்படுகிறது குறித்து சோதனை மேற்கொண்டனர். ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பேருந்துகளின் ஆவனங்களை சரிபார்த்ததுடன் உள்ளே ஏறி பயனிகளிடம் வசூல் செய்யப்பட்ட கட்டன விபரங்கள் குறித்து விசாரனை மேற்கொண்டதுடன் அதிக கட்டனம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். திடிரென ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆர். டி. ஒ தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.